அவ்வப்போது மழை பெய்வதும், குளம் குட்டைகளில் நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
இதில் ஆலடி குளம் என்றால் சொல்லவா வேண்டும் ?
சமீபத்தில் பெய்த கன மழையினால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அதிரையில் செடியன் குளம், ஆலடிக்குளம் இவைகள் இரண்டும் உடையும் நிலை உருவாகி இருந்தது.
இதனைகண்ட சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு குளத்தின் நிலையை கொண்டு சென்றனர்.
இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் நீர் வடிய தேவையான நடவடிக்கைகள் எடுத்தனர் ஆனால் அவர்களின் முயற்ச்சி பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்றிரவு பெய்த அதிகன மழையினால் அதிராம்பட்டினமே வெள்ள நீரில் மிதந்தன.
இதில் மேற்குறிப்பிட்ட இரண்டு குளங்களும் எந்நேரமும் உடையும் நிலை உருவாகி இருந்தது.
இதில் ஆலடி குளம் ரொம்ப ஆபத்தான நிலையில் சிறிய கால்வாய் வழியே மட்டுமே நீர் வெளியாகி கொண்டிருந்தன.
இதனை கவனத்தில் கொண்ட நகர திமுக செயலாளர் அதிரை நகராட்சி ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
உடனடியாக களத்தில் இறங்கிய நகராட்சி நிர்வாகம் சாலையை உடைத்து குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சாலையை உடைத்து பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்று பாதைகளில் சென்றது.
சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்த இப்பணி மாலை 7மணிவரை நீடித்தது இதனை நகராட்சி ஆணையர் சசிகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நகர திமுக செயலாளர் இராம குணசேகரன், திமுக நிர்வாகிகள் புதிய குழாய் பதிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.