அதிராம்பட்டினம் தட்டாரத் தெருவில் பசுக்கன்று ஒன்று கால் உடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடமாட்டம் இன்றி ஒரே இடத்தில் கிடக்கிறது.
அக்கம் பக்கத்தினர் தண்ணீர் கழனிகள் கொடுத்து வருகிறார்கள்.
இரண்டு நாட்களாக நடமாட்டம் இல்லாததால், வயிறு வீங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில்
இருக்கிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சேக் அலி கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்துள்ளார்.
இந்த கன்று குட்டி யாருடையது? நோய் வாய்ப்பட்டு நீண்ட நாட்களாக தேடாமல் இருப்பது எதனால்?
என்றும் கன்றின் உரிமையாளர்கள் இத்தகவல் கிடைத்தும் மீட்க வராமல் இருக்கும் பட்சத்தில் இதனை கால்நடை இலாகா மூலம் பராமரிப்பு இல்லாத இக்கன்று குட்டியை அரசுடைமையாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.