Home » அதிரையில் பொங்கல் தொகுப்பு விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுமா..?

அதிரையில் பொங்கல் தொகுப்பு விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுமா..?

0 comment

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சுமார் 31,000 பேர் வசித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடையில் அரசு வழங்கும் 21 வகையான மளிகை பொருட்கள், ஒரு சில நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது, மீதமுள்ள நபர்களுக்கு 21 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும், அதிலும் சில பொருட்கள் இல்லாமலும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் செக்கடிமேட்டில் உள்ள நியாய விலை கடைக்கு (19GC019PN) நேரில் சென்று கேட்டதற்கு, அங்கு பணி புரியும் ஊழியர் இப்பொழுது எதும் தர இயலாது என்றும், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள், எங்க வேண்டுமானாலும் புகார் அளித்துக்கொள் என்று ஓர்மயாக பேசியுள்ளார்.

விடுபட்ட மக்களுக்கு அதிகாரிகள் கவனத்தில் எடுத்து அரசு அறிவித்த 21 வகையான மளிகை பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ஜனவரி 31ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அதிரை பகுதியில் யார் யாருக்கு என்ன என்ன பொருட்கள் வரவில்லை என்று
குடும்ப அட்டை எண் மற்றும்
ரேஷன் கடை எண் ஆகியவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள whatsapp எண்ணிற்கு தகவல் கொடுத்தால் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய Whatsapp number
9080209190

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter