அதிரை தரகர் தெருவில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தார்சாலை அமைக்கும் பணி, நகராட்சி தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த சாலை தரமற்று அமைக்கப்படுவதாக எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர், ஒப்பந்ததாரர்களிடம் தார்சாலையை தரமாக அமைக்க வலியுறுத்தினர். மேலும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு தார்சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டனர். இந்த தர பரிசோதனையில் தார்சாலை தரமற்றது என நிரூபனமானால் அந்த பணிக்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு கொடுக்க கூடாது எனவும் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் வலியுறுத்தினர். முன்னதாக தார்சாலை தரமற்று அமைக்கப்படுவது குறித்து தகவல் தெரிவித்த அப்பகுதி இளைஞர்களை எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் பாராட்டினர்.
தேர்தலின்போது மக்களை ஏமாற்ற ஏதுவாக அதிரையில் தரமற்று அமைக்கப்பட்ட தார்சாலை!!
49
previous post