சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சியில் அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் இணைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அரசு நிர்ணயித்த 1600 ரூபாயை விட கூடுதலாக 1000 ரூபாய் எந்தவித ரசீதும் இல்லாமல் வசூலிக்கப்படுகிறது..மொத்தமாக 2600 வசூலிக்கப்பட்டு 1600 க்கு மட்டுமே ரசீது கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது
ஆகவே விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கும் படி SDPI கட்சி சார்பில் புகார் மனு கொடுக்கபட்டது.
இதற்கு தீர்வு எட்டபடவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க முடிவெடுக்கபட்டுள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.