105
அதிரையில் ஆரம்பம் முதலே உள்ளாட்சி தேர்தல் களத்தில் சமூதாய கட்சிகளுக்கான ஆதரவு அலை வீசிவரும் சூழலில், OSK, SDPI, மஜக, ஒருங்கிணைந்த சமூதாய கூட்டமைப்பு ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன.
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் நிகழ்த்தப்பட்ட வார்டு மறுவரையரை குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் திமுகவுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட அதிரையர்கள் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் SDPI, மஜக, ஒருங்கிணைந்த சமூதாய கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டணி அதிரையர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. SDPI-14, மஜக-3, OSK-6 என மொத்தம் 23 வார்டுகளில் இந்த மெகா கூட்டணி களம் காணுகின்றது.