102
அதிரை நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் தமீம் அன்சாரி நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது. திமுக கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிரை நகரில் போதிய இட ஒதுக்கீடு செய்யப்பட வில்லை எனவும், இதனால் எங்களின் மாவட்ட நிர்வாகத்தின் வழி காட்டுதலில் தனியாக களம் காண இருக்கின்றோம் என்றார். .
மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 வார்டுகளில் போட்டியிட உள்ளோம் என்றும், இன்னும் சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
கூட்டணி அமைத்து சில கட்சிகளுடன் இணைந்து இணக்கமாக செய்லபட இருப்பதாக தெரிவித்த அவர், சில கட்சிகளுடன் சுமூக பேச்சுவார்த்தை தொடர்கிறது என அவர் கூறியுள்ளார்