Home » OSK கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்- ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன் வேண்டுகோள்!!

OSK கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்- ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன் வேண்டுகோள்!!

by
0 comment

அதிராம்பட்டினம் நகர்மன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் நோக்கில் அதிரை OSK ஒருங்கிணைப்பாளர் ஜியாவுதீன் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது அதிராம்பட்டினம் உள்ளிட்ட முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் இஸ்லாமிய வாக்குகளை ஒருமுகப்படுத்தி ஓரணியை புலப்படுத்தும் நோக்கில் நாம் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிடோம்,அதன் படி பல்வேறு சமூதாய கட்சிகள்,இயக்கங்களை அழைத்து பேசி சுமுக உடன்பாட்டை உருவாக்க நமது OSK குழு அயராது பாடுபட்டது என்றும், நமது நோக்கம் கொள்கை இவைகளை புரிந்து கொண்ட சோசியல் டெமாக்ரடிக் பாராட்டி ஆஃப் இந்தியா (SDPI) மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி(MJK) ஆகிய இரு அணிகளும் ஒற்றுமையை மட்டும் பிரதானமாக கொண்டு கரம் கோர்த்தனர்.

இதுதவிர முஸ்லீம் லீக்,மமக போன்ற சமூக கட்சிகளுக்கும் எங்களின் அழைப்பை கொடுக்க தவறவில்லை.

ஏனோ என்ன காரணமோ அவர்கள் எங்களுடன் இணைய மறுத்து விட்டார்கள்.

இந்த நிலையில் OSK மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளார்கள்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் விரைவில் சின்னம் ஒதுக்கீடு செய்ய உள்ளனர்.

குறைந்த நாட்களே உள்ள நிலையில் மக்களிடம் சின்னத்தை கொண்டு சேர்க்கும் பணிகளில் நமது தேர்தல் பரப்புரை குழுவினர் ஈடுபடுவார்கள் என்றும், வாக்காளர்கள் ஒற்றுமை மட்டுமே எங்களின் பிரதான நோக்கமக கொண்டு களமாடும் OSK,SDPI,MJK கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என ஜியாவுதின் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter