Home » ஹிஜாப் சர்ச்சை: இஸ்லாமிய மாணவியருக்கு மிரட்டல் கால்! போன் நம்பரை லீக் செய்த கல்லூரி..??

ஹிஜாப் சர்ச்சை: இஸ்லாமிய மாணவியருக்கு மிரட்டல் கால்! போன் நம்பரை லீக் செய்த கல்லூரி..??

0 comment

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து போராடி வரும் இஸ்லாமிய மாணவிகளின் போன் நம்பரை பியு கல்லூரி நிர்வாகம் ஒன்று லீக் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கர்நாடகா முழுக்க பல பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக அங்கு இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றன. பல இடங்களில் இந்த போராட்டம் கைமீறி சென்றுள்ளது.

இந்து vs முஸ்லீம் என்ற போராட்டமாக இது உருவெடுத்துள்ளது. இது பல இடங்களில் கலவரத்தில் முடிந்துள்ளது. இதனால் அங்கு பியு கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் அங்கு இஸ்லாமிய மாணவிகளின் போன் நம்பரை பியு கல்லூரி நிர்வாகம் ஒன்று லீக் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக the quint ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், உடுப்பியில் உள்ள அரசு பி யு கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகளின் எண்கள் லீக் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் அலியா அஸாதி உள்ளிட்ட பல இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் போராட்டத்தின் அடையாளமாக மாறி உள்ளனர்.
இந்த வழக்கு ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் அங்கு இஸ்லாமிய மாணவிகளின் போன் நம்பரை பியு கல்லூரி நிர்வாகம் ஒன்று லீக் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக the quint ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், உடுப்பியில் உள்ள அரசு பி யு கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகளின் எண்கள் லீக் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் அலியா அஸாதி உள்ளிட்ட பல இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் போராட்டத்தின் அடையாளமாக மாறி உள்ளனர்.

அதோடு மாணவிகளின் பெற்றோர்கள் போன் எண்ணும் இதில் கசிய விடப்பட்டுள்ளது. இந்த கல்லூரியின் Development Committee கமிட்டி தலைவராக பாஜக எம்எல்ஏ ரகுபதி பாட் இருக்கிறார். இதனால் அவரின் அழுத்தத்தில் பெயரில் இந்த சம்பவம் நடந்து இருக்கலாமோ என்று இஸ்லாமிய மாணவியரின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இவர் கடந்த ஒரு வருடமாகவே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்ததாக அந்த மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Quint ஊடகத்தில் இஸ்லாமிய மாணவ அலியா ஆஸாதி அளித்த பேட்டியில், எங்களின் புகைப்படங்களை வாட்ஸ் ஆப்பில் பரப்பி வருகிறார்கள். எங்களின் போன் நம்பரையும் வெளியே பரவ விட்டுள்ளனர். இனியும் எங்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பது அச்சமாக உள்ளது. எனக்கு அடிக்கடி மிரட்டல் போன் கால் வருகிறது. ஆன்லைன் கிளாஸுக்காக வாங்கிய போன் இது. இப்போது பலர் போன் செய்து மிரட்டு கிறார்கள்.

எங்கள் வீட்டு விலாசத்தை வேறு லீக் செய்துள்ளனர். இதனால் வீட்டை விட்டே வெளியே செல்ல பயமாக இருக்கிறது. என் அப்பா, அம்மா போன் எண்களையும் அப்ளிகேஷனில் இருந்து எடுத்து லீக் செய்துள்ளனர். அவர்களுக்கும் மிரட்டல் கால்கள் வருகின்றன. எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. இந்து மாணவ, மாணவியர் போன வாரம் வரை கூட எங்களுடன் நட்பாக இருந்தனர். ஆனால் அவர்களுக்கு திடீரென என்ன ஆனது என்று தெரியவில்லை.

திடீரென எங்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் எங்களுடன் நட்பாக பழகுவார்கள் என்று நம்புகிறோம். எனக்கு நிறைய கனவு இருந்தது. போட்டோகிராபர் ஆக வேண்டும். காடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் இப்போது அது எல்லாம் நடக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. எங்களை யாராவது தாக்குவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது, என்று அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்திற்கு பேட்டி அளித்த மற்ற இஸ்லாமிய மாணவிகளும் இதே செய்தியை உறுதிப்படுத்தி உள்ளனர். தங்களுக்கும் இதேபோல் மிரட்டல் போன் கால்கள் வந்ததாக இஸ்லாமிய மாணவிகளை குறிப்பிட்டு உள்ளனர். தங்களுக்கு மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறோம் என்றும் அந்த இஸ்லாமிய மாணவிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter