அதிரை நகராட்சிக்கான தேர்தல் களம் மெல்லமெல்ல அனல்பறக்க துவங்கி இருக்கும் சூழலில், சிட்டிங் வார்டுகளை விட்டுவிட்டு வேறு வார்டுகளுக்கு பிரபல வேட்பாளர்கள் ஓட்டம் பிடித்திருக்கும் தகவல் வாக்காளர்களை முகம் சுளிக்க செய்துள்ளது. சிட்டிங் வார்டுகளில் போட்டியிட்டால் மக்களின் கடும் கோபத்திற்குள்ளாகி மண்ணை கவ்வ வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் வேறு வார்டுகளுக்கு நெய்சாக நழுவி இருக்கின்றனர் முன்னாள் கவுன்சிலர்கள். இருப்பினும் உறவுக்காரர்கள் மூலம் அந்த முன்னாள் வார்டு கவுன்சிலர்களின் செயல்பாடுகளை தற்போதைய வார்டு மக்கள் அறிந்து வைத்துள்ளனர். இதனால் வாக்குகளை பிரித்து சொற்ப வாக்குகளில் வெற்றிபெற்றுவிடலாம் என தப்பு கணக்கு போட்டு களம் காணும் வேட்பாளர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரையில் சிட்டிங் வார்டுகளை விட்டுவிட்டு வேறு வார்டுகளுக்கு ஓட்டம்பிடித்த கவுன்சிலர்கள்! வாக்காளர்களே உஷார்!!
154