Home » அதிரை திமுக-வின் திட்டமிட்ட பொய் பிரச்சாரம்! SDPI பதிலடி!!

அதிரை திமுக-வின் திட்டமிட்ட பொய் பிரச்சாரம்! SDPI பதிலடி!!

by அதிரை இடி
0 comment

நடைபெற கூடிய அதிரை நகர்மன்ற தேர்தலில் ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு, மஜக, தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவோடு 14 வார்டுகளில் SDPI போட்டியிடுகிறது. இந்நிலையில், பாஜக தங்களுக்கு எதிரியல்ல என்று SDPI வேட்பாளர் சொன்னதாக திமுக தரப்பினர் பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரசுக்கு 14வது வார்டு SDPI வேட்பாளர் அபுல்ஹசன் அளித்த பேட்டியில், மெயின் ரோட்டில் என்னை சந்தித்த திமுக 17வது வார்டு வேட்பாளர் முகைதீன், பாஜகவுக்கு SDPI ஆதரவு என்று கூறி 14வது வார்டில் SDPI வாக்கு கேட்பதாக தெரிவித்தார். உடனே நான் தான் அந்த வார்டில் SDPI வேட்பாளர் என்றும் தாங்கள் சொல்வதுபோல் நான் ஒருபோதும் வாக்கு கேட்கவில்லை என்றேன். மேலும் இதுபோல் பொய் பிரச்சாரம் செய்யாமல் திமுக செய்த சேவைகளை கூறி அரசியல் செய்துக்கொள்ளுங்கள் என முகைதீனிடம் தெரிவித்ததாக அபுல்ஹசன் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய முகம்மது தம்பி, இந்தியா முழுவதும் பாஜக-வை வீழ்த்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் SDPI எடுத்து வருவதாக கூறினார். இந்த சூழலில் பாசிசத்திற்கு எதிராக களத்தில் நின்று பல உயிர்களை தியாகம் செய்தவர்கள் SDPI-யினர் என கூறிய அவர், SDPI பற்றிய பொய் பிரச்சாரத்தை விட்டுவிட்டு திமுக செய்த சேவைகளை மக்களிடம் கூறி வாக்கு கேளுங்கள் என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter