182
அதிரை நகரில் நாளையத்தினம் காலை 7மணி முதல் மாலை 5மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். அதிரையில் மேலத்தெரு சங்கம், கீழத்தெரு சங்கம், புதுமனைத்தெரு சங்கம், கரையூர் தெரு பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் ஆகியவற்றில் முகாம்கள் நடைபெறும். இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக்கொள்கிறது.