உக்ரைன் நாட்டில் சிக்கிய அதிரை மாணவர்கள் 3 பேரின் தகவல்களை திரட்டி அரசின் கவனத்திற்கு அதிரை எக்ஸ்பிரஸ் கொண்டு சென்றது. மேலும் அவர்களின் குடும்பத்தினரும் மாணவர்களை மீட்டு கொண்டு வர இரவு பகல்பாராமல் முயற்சித்தனர். மேலும் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் தமீம் அன்சாரி இந்த விஷயத்தில் சிறப்பு கவனமெடுத்து அதிரை மாணவர்கள் குறித்த தகவல்களை காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நாகூர் கனி, மாநில சிறுபான்மை பிரிவு அஸ்லம் பாட்ஷா ஆகியோர் மூலம் சென்னைக்கு வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்நிலையில் அதிரை மாணவர்கள் 3 பேரும் உக்ரைனில் இருந்து வெளியேறி போலந்து, ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் விமானங்கள் மூலம் தாயகம் திரும்ப இருக்கிறார்கள்.
உக்ரைனில் இருந்து வெளியேறிய அதிரை மாணவர்கள்!
61