அதிரை நகர SDPI வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அமைதி பூங்காவான அதிரையில் உட்கட்சி அரசியல் பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்ற முயலும் ஆளுங்கட்சியனரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதிரை திராவிட முன்னேற்ற கழகத்தில் நகரச் செயலாளர் இராம.குணசேகரன் – முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் S.H.அஸ்லம் ஆகியோரிடையே கடந்த சில காலங்களாக நடந்து வரும் பிரச்சினையை சிலர் மதரீதியான பிரச்சினையாக மடைமாற்றம் செய்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இது முற்றிலும் தவறான போக்காகும்.
அதிரை எப்போதும் போல அமைதியாகவே இருந்து வருகிறது. அதிரை மக்கள் விஷமிகளின் சூழ்ச்சிகளுக்கெல்லாம் இடம் தரமாட்டார்கள்.
உட்கட்சி அரசியல் பிரச்சினையை மடைமாற்ற செய்து மதப்பதற்றத்தை ஏற்படுத்த முயல்வோர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.” என அதிரை SDPI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.