66
அதிரையை MMS ஆளுமைகள் 40 ஆண்டுகள் நிர்வகித்து வந்துள்ளனர். இந்த சூழலில் 2006ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2022ம் ஆண்டில் MMS.தாஹிரா அம்மாள், நகராட்சி மன்ற தலைவியாக பொறுப்பேற்றுள்ளார். 1996ம் ஆண்டில் அப்போதைய அதிரை பேரூராட்சி தலைவியாக MMS.தாஹிரா அம்மாள் பொறுப்பு வகித்தபோது MMS.அப்துல் வகாப் துணை தலைவராக இருந்து நிர்வாகத்தை கவனித்து வந்தார். இதேபோல் 2001ம் ஆண்டில் மீண்டும் MMS.தாஹிரா அம்மாள் பேரூராட்சி மன்ற தலைவியாக தேர்வு செய்யப்பட்டு MMS.அப்துல் வகாப் துணை தலைவராக தொடர்ந்தார் என்பது வரலாறு.