மத்திய அரசு தொடர்ந்து நீதிமன்றம் மூலமாக முத்தலாக் விசயத்தில் முஸ்லிம்கள் தனியார் சட்டத்தில் கை வைக்கும் வகையில் பல முயற்சி எடுத்து வருகிறதுஇது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்துக் கேட்புகளை நடத்தி வருகிறது.இதுவரை உ.பி.அரசு மட்டுமே இதற்கு ஆதரவளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் நிலைபாடு எடுப்பதற்கு முன்பு தமிழக அமைச்சர் நிலோபர் கபில் அவர்கள் ஒரு கருத்து கேட்பை தலைமை செயலகத்தில் இஸ்லாமிய தலைவர்களை அழைத்து நடத்தினார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக துணை தலைவர் I.முஹம்மது முனீர், மஜக சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, ஜமாத்துல் உலமா செயலாளர் அன்வர்பாஷா, நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா MP, முன்னால் வக்புவாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், பாத்திமா முஸாப்பர்,SDPI சார்பில் மாநில செயலாளர் அமிர்ஹம்ஸா, ஹஜ் கமிட்டி தலைவர் ஜப்பார், இல்யாஸ் ரியாஜி, கான்பாகவி, தர்வேஸ் ரஷாதி, மன்சூர் காஸிபி, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிறுவன உறுப்பினர் ரகிம், பாப்புலர் ஃபரண்ட் சார்பில் அப்துல் ரசாக், ஜமாத்துல் உலமா சார்பில் முஹம்மது ஷெரிப், ஷபியுல்லாஹ். ஆகியோருடன் ஏராளமான உலாமாக்களும் சமுக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.
இதில் இஸ்லாமிய இயக்கம் கட்சிகளின் தலைவர்கள் தங்களது கருத்தை எடுத்து உரைத்தார்கள் இதை கவனத்தில் கொண்டு
கண்டிப்பாக முஸ்லிம் களின் உணர்வை தமிழக அரசு எடுத்து உரைக்கும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்க பட்டுள்ளது.