Home » எகிறி அடிக்கும் பெட்ரோல், டீசல் விலை! தொடர்ந்து 8வது நாளாக விலையேற்றம்!!

எகிறி அடிக்கும் பெட்ரோல், டீசல் விலை! தொடர்ந்து 8வது நாளாக விலையேற்றம்!!

0 comment

கடந்த 8 நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. இன்று 9வது நாளாக பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69, டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யா-உக்ரைன் போர் சூழல் தாக்கம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்றெல்லாம் பேசப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நேரத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலை அதிகரிக்கும் என்ற தகவலும் வெளியானது. ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படாமல் இருந்தது. குறிப்பாக, தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த பல நாட்களாக நாட்டில் பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் நீடித்து வந்தது. தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகளும் இதை விமர்சித்திருந்தன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என ஒரே விலையில் நீடித்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களுக்கு முன் உயரத் துவங்கியது. அதாவது கடந்த மார்ச் 22ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றுதான் உயர்ந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.78, டீசல் விலை ரூ.3.90 அதிகரித்து இருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.. சென்னையில், நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94, டீசல் ரூ.96.00க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69, டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் மட்டும், 8 முறை அதிகரிக்கப்பட்டுள்ள பெட்ரோல் ரூ.5.29 மற்றும் டீசல் ரூ.5.33 விலை உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெருத்த கவலையில் உள்ளனர்.

இதனிடையே, எரிபொருள் விலை ஏற்றம் எதிர்க்கட்சிகளை கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக, இந்த விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி வரும் 31-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விலைவாசி இல்லாத பாரதம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 2-ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும், ஏப்ரல் 7-ம் தேதி மாநில தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter