130
அதிரை கீழத்தெரு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதாக மின் வாரியத்திற்கு 19வது வார்டு கவுன்சிலரின் கணவரும் கம்யூனிஸ்ட் நகர செயலாளருமான ஹாஜா மைதீன் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு மின்வாரிய ஊழியர்கள் செல்லவில்லை. மாறாக தனியார் வணிக வளாகம் ஒன்றிற்கு புதிய மின் கம்பங்கள் அமைத்து கொடுக்கும் பணியில் ஊழியர்கள் பிசியாக இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹாஜா மைதீன், தனியார் வணிக வளாகத்தின் வாயிலில் பணி செய்துக்கொண்டிருந்த மின் வாரிய ஊழியர்களின் பொறுப்பற்ற தனத்தை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.