குளச்சல் நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ராஜமாணிக்கம், மேலாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அவசர கூட்டத்தில் சுயேட்சை நகர்மன்ற உறுப்பினர் அன்வர்சாதத் கூறும் போது தமிழக அரசு கொண்டு வந்த வீட்டுவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மன்றத்திற்க்கு வராமல் புறக்கணித்த திமுகவின் 10 நகர்மன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த வரி உயர்வானது கொரோனா காலகட்டத்தில் வருவாயை இழந்த மக்களுக்கு கூடுதல் சுமையை தான் இந்த திமுக அரசு வழங்குகிறது. ஆகையால் இந்த கூடுதல் வரியை ரத்து செய்யவோ அல்லது 10சதவித வரி உயர்வை செய்து தீர்மானம் நிறைவேற்ற நகர்மன்றத்தில் 17வது வார்டு உறுப்பினர் அன்வர்சாதத் கேட்டு கொண்டார்.
குளச்சல் நகராட்சியில் வரி உயர்வு! திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு!!
223
previous post