விஜய் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
கலாநிதி மாறன் தயாரித்துள்ள இத்திரைப்படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.
விஜய் ரசிகர்களே காரி உமிழும் வகையில் இந்த பீஸ்ட் டோட்டல் வேஸ்ட் எனும் அளவிற்கு சமூக ஊடகங்களில் கழுவி ஊற்றி வருவதை காண முடிகிறது.
இந்த நிலையில், பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொது செயலாளர் அப்துல் கரீம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் மக்களை மடையர்களாக ஆக்கும் இந்த சினிமாக்களை சமூக சிந்தனை உள்ளவர்கள் பார்ப்பது இல்லை என்றாலும், முழுக்க, முழுக்க முஸ்லிம்களை திவிரவாதிகளாக சித்தரித்து இந்த படம் எடுக்கபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்தினம், விஜயகாந்த், அர்ஜூன், கமல் ஹாஸன் போன்றவர்கள் ஓய்வு பெற்று, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பழக்கம் முடிவிற்கு வந்து விட்ட நிலையில் அதை மீண்டும் தூசி தட்டும் வேலையில் விஜய் இறங்கியிருக்கிறார்.
கடந்த காலங்களிலும் கூட விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படத்தில் முஸ்லிம்கள் ஸ்லிப்பர் செல்களாக ஒவ்வொரு கடைத் தெருவிலும் ஊடுருவி இருக்கிறார்கள் என்ற விஷ விதையை தூவி விட்டார்.
பீஸ்ட் படத்தில் விஜய் ஆப்கானிஸ்தான் சென்று மக்களை மீட்டு வருவதாக சில தகவல்கள் சொல்கின்றனர். உக்ரைனுக்கு இவரை அனுப்பி இருக்கலாமே என்றும் கோரிக்கையும் வைக்க ஆரம்பித்துள்ளனர் சினிமா ரசிகர்கள்.
காவிக் கொடியை கிழித்து டிரைலர் வந்த போது சங்பரிவாரங்கள் ஏன் எதிர்க்கவில்லை என்று விளங்கி கொள்ளும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாகவும், மோடி இதற்கு விளம்பரம் செய்வார் என்று சொல்லும் அளவிற்கு முஸ்லிம் விரோத போக்குடன் இந்த படம் எடுக்கபட்டுள்ளது.
எனவும் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதால் இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனையை ஊட்டும் வகையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது, எனவே தமிழக அரசு இப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்வதாக கண்டன அறிக்கையில் அப்துல் கரீம் குறிப்பிட்டு உள்ளார்.