அதிரை SDPI வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் வரிவிதிப்பை வெளிப்படையாக அறிவிப்பு செய்யாமல் இருப்பதன் ரகசியம் என்ன? மக்களுக்காக நல்லாட்சி தருகிறோம் என்று கூறிக்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேலும் சுரண்டுவது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் ? மக்களுக்கான நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் வரி உயர்வை கொண்டு வந்து மக்களை வதைக்க முற்படுவது ஏன்? மக்கள் வரிப்பணத்தில் தான் நகராட்சி இயங்கி வருகிறது. எனவே மக்கள் நலனை புறக்கணித்து சுரண்டலில் ஈடுப்பட முயலாமல் அறிவிப்பை ஒளிவு மறைவின்றி வெளியிட்டு வரிகளை மறு சீராய்வு செய்ய முற்பட வேண்டும்! அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி மக்களை பாதிக்காத வகையில் வரிகளை நிர்ணயம் செய்திட வேண்டும். வெறுமனே நல்லாட்சி எனக் கூறிக் கொள்வதில் மக்களுக்கு எந்த விதமான பிரயோசனமும் இல்லை நல்லாட்சி என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் செயல்படுத்துவது தான்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
More like this
அதிரை: புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி மாதிரிகள் சேகரிப்பு!
அதிராம்பட்டினத்தை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் குளத்தில் ஆண் குழந்தை சடலம் ஒன்று மிதப்பதாக கடந்த மாதம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின்...
அதிரை: பசி போக்கும் திட்டத்தின் கீழ் 100 நபர்களுக்கு பிரியாணி வழங்கிய...
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க ஹானஸ்ட் சார்பாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது, அதன்படி இன்று மதியம் அதிராம்பட்டினம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சுமார்...
சவுதி அரேபியா யான்புவில் IWF-ன் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்., திரளான தமிழர்கள்...
சவூதி அரேபியா யான்பு பகுதியில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டலம் சார்பில் பலத் அல்ஹிக்கி ஹோட்டலில் நேற்று(26/09/2024) வியாழக்கிழமை இரவு...