திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் புதிதாகப் பள்ளிவாசல் கட்டியுள்ளனர். இந்நிலையில் குடியிருப்புக்கு அனுமதி பெற்றுவிட்டுப் பள்ளிவாசல் கட்டியுள்ளதாகக் கூறி ஏற்கெனவே வழங்கிய அனுமதியைப் பேரூராட்சி செயல் அலுவலர் ரத்து செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலை இடிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர்.
இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதி, விசாரணையை 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்ததுடன், முதலில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் அலுவலர்கள் பள்ளிவாசலின் கதவுகளைப் பூட்டி சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்புக்காகக் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முத்துப்பேட்டையில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்குப் பேரூராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.
More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...





