பாலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சனை செய்திகளை முன்னணி செய்தி ஊடகமான அல் ஜசீரா வெளியிட்டு வருகிறது.
இதனடைய அல் ஜசீரா ஊடகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஷீரின் அபு அக்லே புதன்கிழமை ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலைச் செய்தியாகக் கொண்டிருந்தபோது நேரடி தோட்டாவால் தாக்கப்பட்டார். அவருடன் இருந்த மற்றோரு பத்திரிகையாளரான அலி அல்-சமூதியும் முதுகில் சுடப்பட்டுள்ளது இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஷீரின் அபு அக்லே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

51 வயதான மூத்த பத்திரிக்கையாளர் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலை செய்தியாக சேகரித்தபோது அப்போது அவர் ஒரு பிரஸ் உடையை அணிந்திருந்தும் ஒரு தோட்டவால் முகத்தில் சுடப்பட்டர்.
சம்பவ இடத்தில் பத்திரிகையாளர் குழுவில் ஒருவரான ஷாதா ஹனய்ஷா கூறுகையில்:-
துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேலியப் படைகள் அவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதைத் தெளிவாகக் காண முடியும் என்று ஹனய்ஷா கூறினார்.
அல் ஜசீரா பத்திரிகையாளர் அணிந்திருந்த பாதுகாப்பு உடையைப் அணிந்திருந்த நிலையில் “ஷிரீனைக் கொன்றவர் அவளைக் கொல்லும் நோக்கம் கொண்டது, ஏனெனில் அவர் தனது உடலின் பாதுகாக்கப்படாத முகம் பகுதியில் தோட்டாவைச் சுட்டார்.
“அவர்கள் உண்மையில் எங்களில் சிலரைக் கொல்ல விரும்பவில்லை என்றால், இந்த குறுகிய பகுதியில் நாங்கள் வருவதற்கு முன்பே அவர்கள் சுட ஆரம்பித்திருக்கலாம். இது பத்திரிக்கையாளர்கள் மீதான ஒரு தெளிவான படுகொலையாகவே நான் பார்க்கிறேன்,” என்று அவர் கூறினார்.