171
அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எண் 1ல் அதிகப்படியான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
போதுமான வகுப்பறை இன்றி மாணவர்கள் பள்ளி வாளாக வெளிப் புறங்களில் கல்வி பயின்று வந்த நிலையில் அதற்கான வகுப்பறைகளை கட்ட பள்ளி கல்வி துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொண்டு கட்டிட பணிகள் முடிந்துள்ளன.
இந்த நிலையில் புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா அண்ணாத்துரை, பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.