அதிராம்பட்டினம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற ஜூன் 4ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட நிலையில், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு இன்று(25/05/2022) முதல் தொடங்கி உள்ளது.
எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்(வண்டி எண் – 06035) :
அனைத்து சனிக்கிழமைகளிலும் எர்ணாகுளத்தில் பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு,
அதிராம்பட்டினத்திற்கு நள்ளிரவு 2.39 மணிக்கு வந்து 2.40 மணிக்கு கிளம்பி
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 5.50 மணிக்கு சென்று சேரும்.
வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்(வண்டி எண் – 06036) :
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு,
அதிராம்பட்டினத்திற்கு இரவு 9.38 மணிக்கு வந்து, 9.40 மணிக்கு கிளம்பி,
அனைத்து திங்கட்கிழமைகளிலும் எர்ணாகுளத்திற்கு பகல் 12 மணிக்கு சென்று சேரும்.
திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் இயக்கப்படும் இந்த முதல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.