Home » அதிரை தமுமுக ஆலோசனைக் கூட்டம் : கூட்டு குர்பானி முன்பதிவு செய்ய அழைப்பு!!

அதிரை தமுமுக ஆலோசனைக் கூட்டம் : கூட்டு குர்பானி முன்பதிவு செய்ய அழைப்பு!!

by admin
0 comment

அதிரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த (18.06.2022) சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு கூட்டுக் குர்பானி திட்டத்தில் இந்த வருடம் மாடு ஒரு பங்கின் விலை ₹.2,400/- என நிர்ணயம் செய்யப்படுள்ளது.

இக்கூட்டத்தில் அதிரை தமுமுக நகரத் தலைவர் A.அப்துல் அலீம், மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா, மாவட்ட துணைச் செயலாளர் சேக்காதி மற்றும் இதர அதிரை தமுமுக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

கொரோனா போன்ற பேரிடர் காலகட்டங்களில் சமுதாய சேவைகளை செய்து வரும் தமுமுகவிற்கு தங்களுடைய குர்பானி தோல்களை தமுமுகவிற்கு வழங்கி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்திடுமாறு அதிரை நகர மக்களுக்கு நகர தமுமுக அழைப்பு விடுத்துள்ளது.

தமுமுக கூட்டு குர்பானி சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு

97887 63232, 96290 11132, 90924 58491

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter