Home » SSMG கால்பந்து தொடர் : ROYAL FC, AFFA அதிரை அணிகள் வெற்றி!!

SSMG கால்பந்து தொடர் : ROYAL FC, AFFA அதிரை அணிகள் வெற்றி!!

by admin
0 comment

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் ROYAL FC அதிரை – கரம்பயம் அணிகள் மோதின.

ஆட்டம் ஆரம்பித்த அடுத்த சில நொடிகளிலே ROYAL FC அதிரை அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது.

முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் ROYAL FC அதிரை அணி 2 – 0 என்கிற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் கரம்பயம் அணி கிடைத்த அணைத்து வாய்ப்புகளையும் வீணடித்ததது. இதனை மிக நேர்த்தியாக பயன்படுத்திய ROYAL FC அதிரை அணி இரு கோல் அடித்து 4 – 0 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் அதிரை AFFA – BLUES FC வேலங்குடி அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் அதிரை AFFA அணி தனது முதல் கோலை பதிவு செய்த அடுத்த நிமிடத்தில் வேலங்குடி அணியும் ஒரு கோல் அடித்ததும் ஆட்டம் 1 – 1 என்ற கோல் கணக்கில் இன்னும் பரபரப்பானது.

இரு அணிகளும் சமபலத்துடன் அடுத்தடுத்து கோல் அடிக்க முனைப்பு காட்டினர், இருந்த போதிலும் வேலங்குடி அணி தனது இரண்டாவது கோலை பதிவு செய்து 2 – 1 முன்னிலை பெற்றது.

இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் சளைக்காமல் தொடர்ந்து முன்னேறியதன் விளைவாக அதிரை AFFA அணி தனது இரண்டாவது கோலை பதிவு செய்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

மேலும் கோல் ஏதும் விழாமல் வேலங்குடி அணி வீரர்கள் தடுப்பாட்டம் ஆடியும் பலனளிக்கவில்லை.

அதிரை AFFA அணியின் நட்சத்திர வீரர் ஆசிப் போட்டி முடிவடைய 3 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கோல் அடித்ததும் அரங்கே உற்சாக வெள்ளத்தில் மிதந்தது.

இறுதியாக அதிரை AFFA அணி 3 – 2 என்கிற கோல் கணக்கில் சமபலம் வாய்ந்த வேலங்குடியை வெளியேற்றியது.

நாளைய தினம் கெளதியா 7’s நாகூர்(B) – United FC தஞ்சாவூர் அணிகள் களம் காண உள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter