அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முகைதீன் பாகவி தலைமையில் திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நேற்று(25/06/22) நடைபெற்றது.
இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது MLA, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் MP, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் MP, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் IAS, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள், அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,
இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர்கள் & சமுதாய தலைவர்கள் ஆகியோர் ஆகியோர் எழுச்சி உரையாற்றினார்கள்.
மாநாட்டில் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவதூறாக பேசிய பாஜகவை சேர்ந்த நுபுல் சர்மா, நவீன் ஜிண்டாலை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தமிழக அரசு மதக்கலவர தடுப்புச்சட்டத்தை இயற்ற வேண்டும், நாட்டில் நிலவும் வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்த உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோடிக்கணக்கான மக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.


























