அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் புதிய உறுப்பினர் பணியேற்பு விழா தனியார் அரங்கில் நடந்தது.
இதில் புதிய தலைவராக Z .முகம்மது மன்சூர் பதவி ஏற்று கொண்டார்.
முன்னதாக நலதிட்ட உதவிகளை சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர்.
பின்னர் சமூக அக்கறையுடன் பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள், இயக்கங்கள் கட்சிகளுக்கு கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதில் அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம்,அதிரை இதழ் மீடியா வாயிலாக செய்து வரும் நலதிட்டம் பலரையும் சென்றடைந்து ஏழை எளிய மக்கள் கல்வி,மருத்துவம் பெற வழிவகை செய்துள்ளது என்றும் அதனை கவுரவிக்கும் விதமாக “மனித நேய குழுமம்” என்ற விருதை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் வழங்கி பாராட்டியது.
விருது மற்றும் கேடயத்தை அக்குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் A.ரஜபு முகைதின் பெற்று கொண்டார்.
இதுகுறித்து ரஜபு முகைதீன் கூறுகையில் இந்த கேடயமும் கெளரமும் எனக்கோ அல்லது நாங்கள் சார்ந்த குழுமத்திற்கோ கிடைத்த ஒன்றல்ல தேவை உடையவர்களை கண்டறிந்து உரிய நேரத்தில் குழுமங்களின் மூலமாக ஆதாரத்துடன் பதிகின்றோம் இதன் மூலம் பொதுமக்கள் தன்னால் ஆன உதவிகளை அளிக்கின்றனர்.
அவ்வாறு கிடைக்கபெறும் உதவிகளால் ஒருவர் மறுவாழ்வு பெறுகிறார் என்றால் அதனை ஒருமுப்படுத்தி கொண்டு நமது குழும உறுப்பினர்கள் உரியவர்களுக்கு கொண்டு சேர்க்கிறனர்.
இதன் ஹீரோக்களே பொது மக்களாகிய நீங்கள்தான் ஆகவே இன்று கிடைத்த அங்கிகாரமும் பாராட்டும் உங்களுக்கானவை என்றும் இந்த அங்கீகாரத்தையும் கேடயத்தையும் உங்களின் கரஙகளை தழுவட்டும் என்றார்.