115
அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் காயல்பட்டினம் – புதுக்கோட்டை அணியை எதிர்கொண்டது.
போட்டி துவங்கியதிலிருந்தே இரு அணிகளும் கோல் அடித்து முன்னிலை பெறுவதற்காக பல முயற்சிகளை செய்தும் இறுதி வரை பலனளிக்காமல் போனதையடுத்து ஆட்டம் சமநிலையடைந்ததால் ‘டை – பிரேக்கர்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் காயல்பட்டினம் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் புதுக்கோட்டையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.