அதிரையில் கடந்த ஜூன் மாதம் 30.06.2022 வியாழக்கிழமை புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் துவங்கியது.
தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்று வந்த இந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று நிறைவடைந்தது.
முன்னதாக காலை 6 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கி புஹாரி ஷரீஃப் ஓதி நிறைவு செய்த பின் அதிரையின் பெரும்பாலான மக்கள் விரும்பக்கூடிய அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் மார்க்க பிரசங்கம் செய்த பின்னர் சிறப்பு பிரார்த்தனை (துஆ)வுடன் இந்த வருடத்திற்கான புஹாரி ஷரீஃப் நிறைவு பெற்றது.
இந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் கடந்த 75 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நிறைவடைந்த இந்த புஹாரி ஷரீஃபில் ஆண்கள், பெண்கள் என சுமார் 3600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.