செகந்திராபாத் – ராமேஸ்வரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் நெல்லூர்r-சென்னை-திருவாரூர்-அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை-காரைக்குடி-மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்ட இந்த ரயில், நேற்று வியாழக்கிழமை மாலை அதிரை வந்தடைந்தது.
அதிரை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை, பல்வேறு தரப்பினரும் சிறப்பான முறையில் வரவேற்றனர். அந்த வகையில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், ரயிலை வரவேற்கும் விதமாக ரயிலில் வந்திறங்கிய பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரோட்டரி சங்க தலைவர் ரொட்டேரியன் இசட். அகமது மன்சூர், முன்னாள் தலைவர் Rtn.S. சாகுல் ஹமீது, ரோட்டரி சங்கத்தின் செயலாளர் இ.பி.எம்.எஸ். நவாஸ், ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் Rtn.அஹமது சலீம், பிராஜக்ட் சேர்மன்.Rtn. கஜாலி முகமது மற்றும் Rtn. அமெரிக்கா மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.





