இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் என்றழைக்கப்படும் ஏர்டெல் நிறுவனம் இன்று அதிரையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக அதிரையில் ஏர்டெல் நெட்வொர்க் அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருக்கிறது. இருப்பினும், அவ்வப்போது அதிரையில் இந்த நெட்வொர்க் முடங்குவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பலமுறை ஏர்டெல் நெட்வொர்க் மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தும் சரி செய்யப்படாமல் இருந்து வருவதாக அதிரையர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அதிரையில் பெரும்பாலான வணிகர்கள் ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்தி வரும் நிலையில், இன்று 05.09.2022 திங்கள்கிழமை மாலை 6 மணியிலிருந்து அதிரையில் ஏர்டெல் நெட்வொர்க் முடங்கியது அதிரையர்களை பெரிதும் எரிச்சலடைய செய்தாலும் தற்போது மொபைல் நெட்வொர்க் பழுதுபார்ப்பு செய்யப்பட்டு சீராக இயங்கினாலும், ஏர்டெல் ஃபைபர் இண்டர்நட் இதுவரையிலும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.