179
அதிரையை அடுத்த புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பயணிகள் விரும்பும் கடற்கரையாக இருந்து வரும் நிலையில், இன்று காலை கடலில் இருந்து ஒரு சடலம் மிதந்து வந்தது.
இதனையடுத்து அக்கம்பக்கத்திலுள்ள மீனவர்கள், பொதுமக்கள் அருகே சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை தொப்புள்கொடி அறுபடாமல் சடலமாக கிடந்தது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற கொடூர தாய் யார் என காவல்துறை உரிய விசாரணை செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.