Home » வாட்ஸ் அப் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் : அதிரையர்களே உஷார்..! உஷார்..!!

வாட்ஸ் அப் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் : அதிரையர்களே உஷார்..! உஷார்..!!

0 comment

தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் கும்பல்களின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், நமதூர் அதிரையிலும் இது போன்ற ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல் தொடர் கதையாகி வருகிறது.

ஒருவரின் முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் வழியாக போலி வலைத்தளம் அவர் புகைப்படம் வைத்து உருவாக்கி அதன் வழியாக பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தங்களது மொபைலுக்கு வரும் மெசேஜிற்கு லின்க்குகள் க்ளிக் செய்வதன் மூலமாக நமது மொபைலில் உள்ள அனைத்து தரவுகளையும் எடுத்து கொண்டு வாட்ஸ் அப் எண்களில் தொடர்பு கொண்டு அடுத்த 10 நிமிடத்திற்குள் லோன் பணம் செலுத்துமாறும் இல்லையேல் உங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டு, பான்கார்டு போன்ற ஆவணங்களை உங்கள் Contact List ல் உள்ள அனைவருக்கும் அனுப்பி, சமூக வலைத்தளங்களில் உங்களுடைய புகைப்படங்களை பரப்பி விடுவோம் என்று எச்சிரிப்பதாகவும், இன்னும் சிலர் முகநூலில் பண உதவியாக கேட்டு அதனை கொடுக்க மறுக்கும் பட்சத்தில் அவர்களின் போலி சமூக வலைத்தளம் உருவாக்கி அதில் தவறான அபாச புகைப்பட பதிவுகளை மார்பிங் செய்து புகைப்படம் அனுப்புவதாக பலரும் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

இதில் ஒரு சில இளைஞர்கள் அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து நமக்கு ஏன் வம்பு என தேவையற்ற முறையில் அவர்கள் கேட்கும் பணத்தை அவர்கள் சொல்லும் UPI ஐடி களுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். அவர்கள் கேட்கும் பணம் செலுத்தப்படுவதன் காரணத்தால் அதிரையர்களை வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பணம் பறிக்கும் கும்பல் பணம் கறந்து வருவதாக இதனால் பாதிக்கப்படவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனலின் மூலம் பணம் பறிக்கும் கும்பலிடம் தப்பிக்க சில வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

1). உங்கள் மொபைல்களுக்கு வாட்ஸ் அப் அல்லது மெசேஜ் ஏதுனும் லின்க்குகள் வந்தால் அதனை க்ளிக் செய்யாமல் அதனை உடனே டெலிட் செய்து விடுங்கள்.

2). தேவையற்ற செயலிகளை மொபைல்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

3). +120 அல்லது +140 எனத் தொடங்கும் எங்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அந்த அழைப்பை ஏற்காமல் உடனே மறுத்து விடுங்கள்.

4). மேல் குறிப்பிட்டவாறு பணம் பறிக்கும் கும்பல் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களது Contact List ல் உள்ளவர்களுக்கு உங்களை பற்றிய தவறான செய்தியை அனுப்பி விடுவோம் என பணம் கேட்டு மிரட்டினால் அவர்களின் மிரட்டல்களுக்கு பயப்படாமல் துணிச்சலுடன் அவர்களை எதிர்கொண்டாலே இது போன்ற ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து நாமும் நமது பொருளாதாரமும் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter