
அதிரையை சார்ந்த வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி, பல சமூக நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கஜா புயலால் அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் பாதிக்கப்பட்டபோது தன்னார்வ இளைஞர்களை ஒருங்கிணைத்து இவர் மேற்கொண்ட பணிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் கொரோனா லாக் டவுனின்போது மக்களுக்கு மருத்துவ உதவி, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்தல் உள்ளிட்ட சேவைகளையும் Z.முகம்மது தம்பி செய்தார்.
இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீகில் Z.முகம்மது தம்பி அதன் தஞ்சை மாவட்ட தலைவர் ஹாஜி அப்துல் காதர் முன்னிலையில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜைனுலாபுதீன், அதிரை நகர தலைவர் கே.கே.ஹாஜா, நகர செயலாளர் வழக்கறிஞர் முனாஃப், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர்.ஜமால் முகம்மது, மாவட்ட ஊடக அணி மணிச்சுடர் சாகுல் ஹமீது மற்றும் மதுக்கூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.