இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் உள்ள இந்துக்கள் உற்சாக பெருக்குடன் கொண்டாடி மகிழ்வர்.
இதற்காக புத்தாடை முதல் பட்டாசு வரை கொள்முதல் செய்வதற்காக மக்கள் பெருமளவில் நகரங்களை நாடி செல்வது வழக்கம்.கடந்த இரண்டாண்டுகளில் கொரோனா எனும் கொடிய நோயினால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகளை கொண்டாட அரசு தடை விதித்து இருந்தது.
இந்த நிலையில் கட்டுப்பாடுகளின்றி கொண்டாடப்படும் முதல் தீபாவளி என்பதால் கூடுதல் உற்சாகத்துடன மக்கள் பொருட்களை வாங்கி வருகிறார்கள்.
அதன்படி பட்டுக்கோட்டை முக்கிய வீதிகளில் இருக்கும் வணிக நிறுவனங்களை நாடி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.