Home » மனோராவில் சிறுவர் பூங்கா, படகு குழாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்!

மனோராவில் சிறுவர் பூங்கா, படகு குழாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்!

0 comment

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.74 கோடியில் சிறப்பு பணிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மனோரா சுற்றுலா தலத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ளது மனோரா சுற்றுலா தலம். இது கடந்த 1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச்சின்னத்தையே மனோரா என்று அழைக்கின்றனர்.

மனோரா சுற்றுலா தலம், கடந்த சில வருடங்களாக முறையான பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மனோரா சிறப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது : மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபோந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மனோராவில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, சுற்றுலா மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 69.73 லட்சம் மதிப்பீட்டில் மனோரா கடற்கரையில் கான்கிரீட் படகு துறை(jetty) மறுகட்டுமானம் செய்தல் பணி, 3 விசைப்படகு, எஞ்ஜின் உயிர்காக்கும் உடைகள் போன்ற பல்வேறு படகு குழாம் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 18.03 லட்சம் மதிப்பீட்டில் மனோரா கடற்கரையில் கான்கிரீட் படகு துறைக்கு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி,

ரூ. 53.70 லட்சத்தில் சரபோந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மனோரா கிராமத்தில் பயிற்சி மையம் அமைத்து கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு மனோரா சுற்றுலா தலம் சிறப்பு பணிகள் ரூ. 1.74 கோடி மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்திற்கு சுற்றுலா எண்ணிக்கை அதிகரிக்கும் வகையிலும், தஞ்சை மாவட்டத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையிலும் மனோரா சுற்றுலா தலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், கூடுதல் ஆட்சியர்(வருவாய்) சுகபுத்ரா இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஶ்ரீகாந்த் இ.ஆ.ப, வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, திமுக தஞ்சை தெக்ரு மாவட்ட பொருளாளர் அஸ்லம், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) சங்கர், வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter