38
உலகம் முழுவதும் இன்று 25.10.2022 செவ்வாய்க் கிழமை மதியம் 1 மணி முதல் வாட்ஸ் அப் செயலி முடங்கியதால தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர்.
மெட்டா ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ் அப்-பை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 கோடிக்கும் அதிகமான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். தகவல் பரிமாற்றத்திற்கு இது மிகவும் பிரபலமான செயலியாக இருந்து வரும் நிலையில் தற்போது வாட்ஸ் அப் சேவை திடிரென முடங்கியுள்ளது பயனர்களை வருத்தமடைய செய்துள்ளது.
இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரபூர்வத் தகவல் இதுவரையிலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.