அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜமாத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில், வெட்டி குளக்கரையை ஒட்டி நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிப்பு செய்து வரும் அப்பகுதி சமூக ஆர்வலர்களை பாராட்டி நற்சான்று வழங்கி கவுரவித்துள்ளார்கள்.
இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இம்மைக்கும் மறுமைக்கும் பயந்தரக்கூடிய நல்லறங்களை நாங்கள் செய்து வருகிறோம் என்றும்,குறிப்பாக மரம் நடுவதால் நிலத்தடி நீர், காற்று மாசு இல்லாமல் வாழ முடியும் ஆதலால் மக்களுக்கும் பறவைகளுக்கும் உகந்த மரங்களை நாங்கள் எந்த பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் நட்டு வருகிறோம் இதுபோன்ற நல்ல காரியங்களில் அனைவரும் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்வில் ஜமாத் முக்கியஸ்தர்கள் பள்ளிவாசல் இமாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


