66
சமீப நாட்களாக வானில் ஒருவித வெளிச்சமான தொடர்வண்டி பிம்பம் வந்து மறைவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து பல்வேறு கருத்துக்களை வானியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.
அதே பொன்ற ஒரு பிம்பம் இன்று அதிரை வானில் தென்பட்டதாக மனோகரன் என்ற மீனவர் தெரிவிக்கிறார், ஏரிப்புரக்கரை பகுதியை சேர்ந்த அவர் நண்பர்களோடு நின்று கொண்டிருந்த நேரத்தில் வானில் ரயில் போன்ற பிம்பம் தோன்றி மறைந்ததாகவும், அதில் மிகவும் பிரகாசமான வெளிச்சத்தை கண்டதாக தெரிவிக்கிறார்.
இதுகுறித்து நாம் கூகிலில் தேடிய வகையில், ட்விட்டர் நிறுவனர் எலன் மாஸ்க் அனுப்பிய சிறிய வகை செயற்கை கோள்கள் எனவும்,இது தகவல் தொழில் நுட்பத்திற்கு பயந்பாட்டில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.