அதிரை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் சபீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி.பாலசுப்ரமணியம், நகராட்சி தலைவர் MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பேசிய MMS.அப்துல் கரீம், அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பயனடையும் வகையில் அதிரையில் 24 மணிநேர அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தார். இதனிடையே அதிரை தாலுகா அறிவிப்பை விரைவாக நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் நகராட்சி துணை தலைவரும் நகர செயலாளருமான இராம.குணசேகரன் கோரினார்.
அதிரைக்கு 24 மணிநேர மருத்துவமனை வேண்டும்! MMS கோரிக்கை
95