தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் இல்ல திருமண விழா சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ, மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் அதிரை சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் உள்ளிட்டோர் பங்கேற்று ஷெரின் கௌசியா-கலீல் இப்ராஹீம் தம்பதியை நேரில் வாழ்த்தினர். இதனையடுத்து திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியை எஸ்.எச்.அஸ்லம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.