தொண்டி கால்பந்து கழகம் சார்பில் 2ம் ஆண்டு கால்பந்தாட்ட தொடர் தொண்டியில் நடைபெற்றது. இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றியை சுவைத்த சுவைப்புதீன் தலைமையிலான அதிரை ராயல் எஃப்.சி அணி, இறுதி ஆட்டத்தில் அன்வர் தலைமையிலான தஞ்சாவூர் அணியை எதிர்கொண்டது. இதில் முதல் பகுதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாத நிலையில் இரண்டாவது பகுதிநேர ஆட்டம் சூடுபிடித்தது. விறுவிறுப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது பகுதிநேர ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் தஞ்சாவூர் அணி கோல் அடித்தது. இதன் காரணமாக 1-0 என்கிற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணி வெற்றிபெற்று முதல் பரிசான ரூ.15,000/-த்தை தட்டிச்சென்றது. ரன்னரான அதிரை ராயல் FC அணிக்கு ரூ.12,000/- பரிசு தொகை வழங்கப்பட்டது.