Saturday, April 20, 2024

ரம்மியால் டம்மியாகும் அதிரை! கரையும் பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையை பொருத்தவரை தந்தை-மகன் உறவென்பது பெரும்பாலும் பாசத்தை காட்டிலும் காசு பணத்தை வாரி இரைப்பதன் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது. வெளிநாட்டில் இருக்கும் தந்தை தனது மகனுக்கு பாசத்தை ஊட்டி வளர்ப்பதாக எண்ணி ஸ்மார்ட் போன், லாப்டாப் உள்ளிட்ட விலை உயர்ந்த மின்னணு சாதனங்களை வாங்கி கொடுத்துவிடுகின்றனர். அதன் பிறகு அந்த ஸ்மார்ட் போனை வைத்து பிள்ளைகள் என்ன செய்கிறது என கவனிப்பதில்லை.

இந்த நிலையில் இணையத்தில் வீடியோ பார்க்கும் போது வரக்கூடிய ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை கண்டு மதிமயங்கும் இளைஞர்கள் சிலர், தனது பெற்றோரின் வங்கி சேமிப்பு கணக்கு விபரங்களை பயன்படுத்தி அந்த சூதாட்டத்தில் பணம் செலுத்தி விளையாடும் தகவல் நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிரை இளைஞர் காங்கிரஸ் துணை செயலாளர் இப்ராஹிம், உடல் சார்ந்த விளையாட்டு நம் இளைஞர்களிடம் குறைந்துவிட்டது. குறிப்பாக ஸ்மார்ட் ஃபோனே கதி என கிடக்கும் பதின்பர்வ வயதினர்கள் எதற்காக தனது விரல் மொபைல் ஸ்கிரீனை தொடுகிறது என்பதை கூட அறியாமல் அதில் மூழ்கி போயுள்ளனர். இந்த சூழலில் இணையத்தில் சூதாட்ட வீடியோ விளம்பரங்களால் கவரப்படும் இளைஞர்கள், சிறுகசிறுக பெற்றோர் சேமித்து வைத்திருக்கும் பணத்தை சூதாட்டத்தில் செலுத்தி நட்டமடைந்து வருகின்றனர். இது பெரும்பான்மையான பெற்றோருக்கு தெரிவதில்லை. அவர்கள் முறையாக தங்களது வங்கி கணக்கு வரவு செலவு விபரங்களை ஆய்வு செய்வதுடன் பிள்ளைகள் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதையும் கண்காணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். என்றார்.

இதனிடையே ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டில் மூழ்கி கிடக்கும் அதிரை பதின்பருவ இளைஞர்களை மீட்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என சென்னைவாழ் அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை துணை செயலாளர் முகம்மது சாலிஹ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இஸ்லாமிய மார்க்க நெரிமுறைகளை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்ப்பதுடன் அதன் மூலம் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட படுபாதக செயல்களிலிருந்து நம் பிள்ளைகளை பாதுகாக்க முடியும் என்றார். அதுமட்டுமல்லாது தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கடமை தவறினால் ஆன்லைன் ரம்மியால் அதிரை டம்மியாகிவிடும் என கூறும் சாலிஹ், பணமே கட்ட தேவையில்லை, வெல்கம் போனசை வைத்து விளையாடுங்கள் என கூவிகூவி அழைக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள், இந்த கேம் நிதி அபாயத்தின் ஒரு அங்கத்தை உள்ளடக்கியது மற்றும் போதைப்பொருளாக இருக்கலாம், தயவுசெய்து பொறுப்புடனும் உங்கள் சொந்த ஆபத்தில் விளையாடவும் என்பதை சிறுதுனுக்காக மட்டுமே பதிவிடுவதாக சுட்டிக் காட்டினார். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை இவ்வாறான சிறுதுனுக்கு தகவல் மூலம் பயன்படுத்தி தங்களை பொறுப்பானவர்களாக காட்டிக்கொள்கின்றன ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

பெரும்பாலும் தந்தைமார்கள் வெளிநாட்டில் இருப்பதால் உள்ளூரிலிருக்கும் பிள்ளைகளை கண்காணிப்பது கடினம் என எண்ணுவோர் அதிகம். ஆனால் பேரெண்டல் கண்ட்ரோல் ஆப்களை தங்கள் பிள்ளைகளின் ஸ்மார்ட் ஃபோன், டேப் உள்ளிட்டவற்றில் இன்ஸ்டால் செய்வதன் மூலம் அனைத்தையும் எளிதில் கண்காணிக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...