அதிராம்பட்டினம் : பாரம்பரியமிக்க குடும்ப பின்னணியை கொண்ட MMS ஜஹபர் சாதிக் சென்னை திருச்சி உள்ளிடட பன்னாட்டு விமான நிலையங்களில் பல்வேறு துறைகளின் கீழ் பணியாற்றி வருகிறார். இவரது அர்ப்பணிப்பு தன்மை கொண்ட பணியினால் பதவி உயர்வுகள் பல பெற்று இந்த விமான நிலையை மேலாளர் என்ற அந்தஸ்த்திற்கு உயர்ந்து நிற்கிறார்.
ஏர் இந்தியாவின் AI AIRPORT SERVICES LTD என்ற நிறுவனத்தில் கீழ் 140 விமான நிலையங்கள் இருக்கின்றது. இந்நிறுவனத்தின் கீழ் சுமார் 8000 பணியாளர்கள் வரை வேலை செய்து வருகின்றனர், கடந்த இந்த நிலையில் புது டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள 140 விமான நிலைங்களின் சிறந்த மேலாளர் (Star performer of the year) என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறந்த மேலாளர் (Star Performer of the year) என்ற விருதை அதிரை மண்ணின் மைந்தர் MMS குடும்பத்தை சேர்ந்த ஜஹபர் சாதிக் அவர்கள் பெற்று இருக்கிறார்கள். இது குறித்து ஜகபர் சாதிக்கை அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் தொடர்புகொண்டு பேசிய வகையில் இந்த விருதின் மூலமாக நான் சார்ந்துள்ள நாட்டிக்கும் அதிரை மண்ணிற்கும் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார்
மேலும் தற்கால இளைஞர்கள் மிகுந்த கல்வி அறிவு கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர்களை ஒருமுகப்படுத்தி அவர்களுக்கு உகந்த துறையை தேர்ந்தெடுத்து முழு மனதுடன் படித்தால், இலக்குகளை நோக்கி நாம் நகர வேண்டியதில்லை அவைகள் நம்மை தேடிவரும் என்றார்.
