425
அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் புனித ரமலான் மாத தொடர் பயான் நிகழ்ச்சி
ரமலான் முதல் பிறை அறிவிக்கப்பட்ட நாள் துவங்கி 30 நாட்களும்
பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கில் காலை 10.30 மணிமுதல் பகல் 12 மணிவரை பெண்களுக்கும்,
மஸ்ஜிதுல் அக்ஸா மரைக்கா பள்ளி அருகிலுள்ள ஆட்டுக்கொல்லை உள்ளரங்கில் (சென்ற வருடம் பயான் நடைபெற்ற அதே இடம்) தினமும் இரவு 10 முதல் 11.30 வரை ஆண், பெண் என இருபாலருக்கும் புனித ரமலான் மாத சிறப்பு தொடர் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் வழமைபோல் இவ்வருட ரமலானிலும் தவறாது கலந்து கொண்டு பயனடைய அதிரை தாரூத் தவ்ஹீத் அழைப்புவிடுத்துள்ளது.