Friday, March 29, 2024

அதிரையில் தெருநாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு மையம் வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் சேர்மன் கோரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

சுற்றுவட்டார கிராமங்களின் மைய பகுதியாக இருக்க கூடிய அதிரையில் கடந்த 56 ஆண்டுகளாக அரசு கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. கஜா புயலில் சேதமடைந்த இந்த மருந்தகத்தை புனரமைத்து கடந்த 2021ம் ஆண்டு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் அதிரை அரசு கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் சேர்மனும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்திருக்கும் அந்த மனுவில் “பொதுப்பணித்துறையில் டெண்டர் விடப்பட்டு பழைய கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடிபாடுகளை கொண்டு ECR ரோட்டிலிருந்து மருந்துகள் ஏற்றிவரும் வண்டிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக கால்நடைகள் கொண்டுவரும் வண்டிகள் அனைத்தும் மருந்தக கட்டிடம் வரை எளிதாக வரும் வகையில் பெரிய பாதை உயரமாக (ரோடு ) அமைத்து தர வேண்டுகிறேன். சுற்றுவட்டார மக்களின் செல்லப்பிராணிகளான பூனை, நாய் புறாக்கள் இதர பிராணிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் தற்காலத்திற்கு ஏற்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதுடன், தற்போதைய பொதுமக்களின் பிரச்சனையாக உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கையினை வெகுவாக நாளடைவில் குறைக்கும் விதமாக நாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு திட்டம் (ANIMAL BIRTH CONTROL -ABC -PROGRAM ) செயல்படுத்திட ஆவண செய்ய இதன்வழி கேட்டுக்கொள்கிறேன். என எஸ்.எச்.அஸ்லம் குறிப்பிட்டுள்ளார்.

கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்னரே வெயில் சுட்டெரிப்பதால் தெருநாய்கள் வெறிப்பிடித்து அதிரை வீதிகளில் விளையாடும் சிறுவர்களையும் ஆடு மாடுகளையும் குறிப்பாக கோழி உள்ளிட்ட செல்லப்பிராணிகளை கடித்து வரும் சூழலில் முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லமின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...