தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் கடற்கரை நகராக அதிரை திகழ்கிறது. இருப்பினும் முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கடரை சாலை இருந்தும் இந்த ஊரில் அரசின் 108 ஆம்புலன்ஸ் இல்லாதது மக்களை கவலையில் ஆழ்த்தியது. இதனிடையே சுற்றுவட்டாரத்தினரின் மருத்துவ சேவையை கருத்தில் கொண்டு மக்களின் நலனுக்காக அதிரைக்கென தனி 108 ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறைக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கோரிக்கைவிடுத்தார். இதனையேற்று அதிரைக்கென பிரத்யேக ஆம்புலன்சை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பேருந்துநிலையத்தில் நடைபெற்றது. இந்த ஆம்புலன்சை கா.அண்ணாதுரை கொடியசைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இதேபோல் கடற்கரை தெரு நடுநிலை பள்ளியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற கா.அண்ணாதுரை, அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் MMS.அப்துல் கரீம், கவுசிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த அதிரை 110 கிலோ வாட் துணை மின்நிலைய திட்டத்தை திமுக ஆட்சியமைந்ததும் விரைவாக செயல்படுத்தி தர வேண்டும் என சட்டமன்றத்தில் கா.அண்ணாதுரை வலியுறுத்தினார். இதனையடுத்து கடந்த நவம்பரில் சுமார் ரூ.17கோடி மதிப்பீட்டில் அதிரை துணை மின்நிலையத்தை 110கிலோவாட் திறன் கொண்ட மின் நிலையமாக மாற்றுவதற்கு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.