Home » திமுகவில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்! களத்தில் இறங்கிய தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்!!

திமுகவில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்! களத்தில் இறங்கிய தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்!!

by அதிரை இடி
0 comment

இரண்டு மாதத்திற்குள் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டதில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டிய மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்களை திமுகவில் சேர்பது குறித்தும் பேசினார். மேலும் எதிர்வரும் மக்களவை தேர்தல் பணி தொடர்பாகவும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் ஜமாலுதீன், பால்சாமி, இஸ்காக், யூசுப், சேக்தாவூத், அஸ்கர், பொறியாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட அதிரை திமுகவினர் பங்கேற்றனர்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter